Thursday, January 8, 2015

lesson-8

அடுத்த வவுச்சர்

 F5   -  PAYMENT


2. F5   -  PAYMENT (shortcut key - F5)

        இந்த வவுச்சர் வகையில் பணம் கொடுப்பது  மட்டும் பதிவு செய்ய பயன்படுகிறது. அதாவது கணக்கியலில் நடைபெறும் அனைத்து பணம் கொடுப்பதும் மற்றும் வங்கி காசோலையாக இருந்தாலும்   PAYMENT வவுச்சரில்  பதிவு செய்ய வேண்டும். வேறு நடவடிக்கைகளை பதிவு செய்ய கூடாது.

F6   - RECEIPT

3. F6   - RECEIPT (shortcut key - F6)

இந்த வவுச்சர் வகையில் பணம் பெறுவது  மட்டும் பதிவு செய்ய பயன்படுகிறது. அதாவது கணக்கியலில் நடைபெறும் அனைத்து பணம் வாங்குவது  மற்றும் வங்கி காசோலையாக இருந்தாலும்  RECEIPT  வவுச்சரில் பதிவு செய்ய வேண்டும். வேறு நடவடிக்கைகளை பதிவு செய்ய கூடாது.

F7   - JOURNAL

4. F7   - JOURNAL (shortcut key - F7)

இந்த வவுச்சர் வகையில் சரி கட்டுதல் ( AdjustmentVouchers) பதிவு செய்ய பயன்படுகிறது. அதாவது ஒரு சொத்தை(Asset) கடனுக்கு வாங்குவது அல்லது விற்பது, தேய்மானம்(Depreciation), தள்ளுபடி  பெறுவது (Discount Received)அல்லது தள்ளுபடி கொடுப்பது (Discount Allowed) போன்ற நடவடிக்கைகளை இந்த வவுச்சரில் பதிவு செய்யலாம்.


  F8   - SALES


5.  F8   - SALES  (shortcut key - F8)

 இந்த வவுச்சர் வகையில் நிறுவனத்தின் பொருட்கள் விற்பனை ( Sales ) செய்யப்படும் அனைத்து நடவடிக்கைகளை இந்த வவுச்சரில்தான்  பதிவு செய்யப்பட வேண்டும். அது ரொக்க விற்பனை (Cash Sales ) அல்லது கடன் விற்பனை ( Credit Sales ) எதுவாக இருந்தாலும் இந்த வவுச்சரில்தான்  பதிவு செய்யப்பட வேண்டும்.


 F9   - PURCHASE

6.  F9   - PURCHASE (shortcut key - F9)

 இந்த வவுச்சர் வகையில் நிறுவனத்தின் பொருட்கள் கொள் முதல் ( Purchase ) செய்யப்படும் அனைத்து நடவடிக்கைகளை இந்த வவுச்சரில்தான்  பதிவு செய்யப்பட வேண்டும். அது ரொக்க கொள் முதல் (Cash Purchase ) அல்லது கடன் கொள் முதல் ( Credit Purchase ) எதுவாக இருந்தாலும் இந்த வவுச்சரில்தான்  பதிவு செய்யப்பட வேண்டும்.





      நாளை மற்ற வவுச்சர்  வகைகளை பயன்படுத்துவது பற்றி பார்போம்

6 comments:

  1. அருமை, அடுத்த பாடத்தை அனுப்ப வேண்டுகிறேன். நன்றி

    ReplyDelete
  2. இந்த கட்டுரை புத்தகமாக கிடைக்குமா?

    ReplyDelete
  3. பலய பாடங்கள் முழுமையாாாாக வேண்டும்

    ReplyDelete
  4. ரொம்ப நன்றி.தயவு பன்னி முழு பாடமும் அனுப்பினால் நன்றி.

    ReplyDelete