Monday, November 10, 2014

lesson-7

நாம் அதிகம் பயன்படுத்தும் சில லெட்ஜெர்களை டேலியில் பதிந்து உள்ளேன்.



அடுத்து  நாம் டேலியில் இடம் பெற்றுள்ள  ACCOUNTING VOUCHERS பற்றி பார்போம்.

      டேலியில் இடம் பெரும் அனைத்து நடவடிக்கைகளையும் (Accounting transactions ) இந்த வவுச்சர்  வகைகளை பயன்படுத்தியே பதிவு செய்ய இருக்கிறோம். எனவே  வவுச்சர்  வகைகளும் குரூப் போலவே மிக முக்கியமான ஒன்று.
       
     டேலியில் மொத்தம் 18 வகையான வவுச்சர்  வகைகள் உள்ளன. அவற்றில் முதலில் நிதிசார் கணக்குப்  ( Accounts Only) பயன்படும் 10 வகையான வவுச்சர் வகைகள் பற்றிப் பார்போம்.

1. F4   -  CONTRA
2. F5   -  PAYMENT
3. F6   - RECEIPT
4. F7   - JOURNAL
5. F8   - SALES
6. F9   - PURCHASE
7. F10 -  REVERSING JOURNAL
8. CTRL+F8 - CREDIT NOTE
9. CTRL+F9 - DEBIT NOTE
10.CTRL+F10 -  MEMOS

1. F4   -  CONTRA (shortcut key - F4)

        இந்த வவுச்சர் வகை வங்கி கணக்கு (Bank A/c) மற்றும் ரொக்க கணக்கு (Cash A/c) இவற்றிற்கு இடையில் நிதி, பரிமாற்றப்படும்  நடவடிக்கைகளை பதிவு செய்ய பயன்படுகிறது. வேறு நடவடிக்கைகளை பதிவு செய்ய முடியாது.

பணம் வங்கி கணக்கில் (Deposit) போடப்படுவது அல்லது வங்கியிலிருந்து பணம் எடுப்பது (withdrawal)  மற்றும் இரு வங்கி கணக்குகளுக்கு இடையில் பரிமாற்றப்படுவதும் இந்த வவுச்சரில் பதிவு செய்யலாம்.

Deposit voucher

withdrawal voucher


      நாளை மற்ற வவுச்சர்  வகைகளை பயன்படுத்துவது பற்றி பார்போம்.
     


2 comments:

  1. அடுத்த பாடம் அனுப்பி வைக்க வேண்டுகிறேன்.நன்றி

    ReplyDelete
  2. பாடம் முழுவதும் தரலாமா

    ReplyDelete